ஸ்ரீ ரங்கத்தில் கோலாகலமாகத் தொடங்கிய சித்திரைத் தேரோட்டம்.!
sri rangam ranganatha swami therottam start
ஸ்ரீ ரங்கத்தில் கோலாகலமாகத் தொடங்கிய சித்திரைத் தேரோட்டம்.!
நூற்று எட்டு திவ்யதேசங்களில் முதன்மையான போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இது பூலோக வைகுண்டம் என்றும் அனைவராலும் போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரங்கநாதர் கோவிலில் ஒரு வருடத்திற்கு மூன்று முறை தேரோட்டம் நடைபெறும். அதில் குறிப்பாக, சித்திரை தேரோட்ட திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கா, ரங்கா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
English Summary
sri rangam ranganatha swami therottam start