தொடர் அட்டூழியம் - 14 தமிழக மீனவர்கள் கைது.!
srilangan navy arrested 14 fishermans
தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் பதினான்கு பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், 2 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், இலங்கை மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
srilangan navy arrested 14 fishermans