திடீர் மாற்றம்! தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார்  என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுகந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுக்கும் முக்கிய பிரபலங்களுக்கும் தேநீர் விருது அளிப்பது வழக்கம்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிவுக்கு திமுக இடையே கொள்கை ரீதியில் ஆன மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என  தெரிவித்தனர். தேநீரில் இருந்து திமுக பங்கேகாததால் திமுக கூட்டணி கட்சிகளும் பங்கேற்காது என தெரிவித்தார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது, 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகம் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஏழை நடுத்தர மக்களுக்காக முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. வரும் பொங்கல் முதல் முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர்  மருந்தகங்கள் திறக்கப்படும். ஆளுநர் தேநீர் விருந்து குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு,

ஆளுநரின் கருத்தியல் சார்பாக விஷயங்களில் திமுகவிற்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஆளுநர் பதவிக்கும் மரியாதை அளிக்கும் விதமாக தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin attend the tea party hosted by the Governor on the occasion of Independence Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->