சென்னை ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியை பார்க்க சென்றார் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பு!

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்டேடியத்தில் 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த டென்னீஸ் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல் நாட்டு வீராங்கனையும் செக் குடியரசு நாட்டு வீராங்கனையும் விளையாடுகின்றனர்.

இந்த இறுதி போட்டியை காண தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் , அமைச்சர் கே.என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் சிறப்பு நாற்காலி அமைக்கப்பட்டு இருந்தது. முதல் வரிசையில் அமர்ந்து முதலமைச்சருடன் அமைச்சர்களும் எம்பிக்களும் டென்னிஸ் போட்டையை ரசித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin went to see the Chennai Open tennis final


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->