மீண்டும் கொடூரம் - சென்னையில் 2 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெரு நாய்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணாநகர், ஜீவன் பீமாநகர் பகுதியை சேர்ந்தவரட்கள் தங்கபாண்டியன்-பிரதீபா தம்பதியினர். இவர்களுக்கு யாஸ்மிகா என்ற 2½ வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை, கடந்த 27-ந்தேதி மாலை 4 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகில் விளையாடி கொண்டிருந்தது.

அப்போது, அந்த தோட்டத்தில் மறைந்து இருந்த தெருநாய் ஒன்று யாஸ்மிகாவின் மேலே பாய்ந்து முகத்தில் கண்மூடி தனமாக கடித்து குதறியது. இதனால், வலி தங்க முடியாமல் கதறிய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, தாய் பிரதீபா ஓடி வந்து பார்த்தார். அப்போது, தெருநாய் ஒன்று தனது குழந்தையை கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அருகில் கிடந்த கட்டையை எடுத்து நாயை அடித்து துரத்தினார்.

பின்னர் பிரதீபா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு நாய்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் கன்னத்தில் தெருநாய் கடித்து குதறியதால், சதை கிழிந்து தொங்கியது. இதனால் குழந்தைக்கு, கடந்த 28-ந்தேதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சென்னையில் இரண்டாவது முறையாக குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

street dog bite 2 years old child in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->