பள்ளிக்கு செல்ல சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சேலம் அருகே நிகழ்ந்த சோகம்..!
Student Commited Suicide Near Salem
பள்ளிக்கு செல்ல கூறியதால் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு திருணமாகி உமா என்ற மனைவியும் ஜீவன், கிஷோர், முருகவேல் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
உமா தனது மூத்த மகன் ஜீவனை வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தார். ஆனால், ஜீவன் பள்ளிக்கு செல்ல மாட்டேன் எனவும் ஐடிஐ-யில் சேர்த்து விடுமாறு தாயிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், அதற்கு உமா மறுத்துள்ளார்.
இதனால், ஜீவன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்கு செல்ல வேண்டுமென கண்டித்ததால் ஜீவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
English Summary
Student Commited Suicide Near Salem