பச்சையப்பாஸ் பசங்க போட்ட பிச்சைல உயிர் வாழ்வதா? ரயில் முன் பாய்ந்த மாணவன்.! - Seithipunal
Seithipunal


பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் மாநில கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமார் இவர் மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். குமார் கல்லூரிக்கு சென்றுவிட்டு புறநகர் ரயிலில் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பத்திற்கும் மேற்பட்ட குமாரை அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு குமார் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். பச்சையப்பாஸ் பசங்க போட்ட பிச்சைல என்னால உயிர் வாழ முடியாது தப்பா நினைக்காதீங்க அப்பா அம்மா தப்பா நினைச்சுக்காதீங்க என உருக்கமாக பேசியிருந்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். ஆனால், குமார் அதற்குள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி அடையாள அட்டையை வைத்து அவரின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என சக மாணவர்கள் 200க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே யார் பெரியவர் என்ற போட்டி இருந்து வந்தது.

இந்நிலையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்யும் அளவிற்கு இந்த போட்டி வளர்ந்திருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க அரசும் கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student committed suicide In Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->