பட்டுக்கோட்டையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை - உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! - Seithipunal
Seithipunal


பட்டுக்கோட்டையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை - உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரான இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில், ராஜசேகரன் திருட்டு நகையை வாங்கியதாக கூறி, கடந்த 22-ம் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார், இவரது நகைக்கடையில் சோதனை நடத்தினர். அதன் பின்னர், போலீசார் ராஜசேகரன் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி உள்ளிட்டோரை விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், வியாபாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் நேற்று முன்தினம் ராஜசேகரன், அவரது மனைவி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில், வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜசேகரன், செட்டியக்காடு என்ற பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ராஜசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகரன் மற்றும் மனைவி லட்சுமி உள்ளிட்டோரை போலீஸார் சித்ரவதை செய்ததாகவும், இதனால் தான் ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி, போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பட்டுக்கோட்டையில் நேற்று காலை முதல் நகைக் கடைகள், நகைப் பட்டறைகள் என்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும், நகைக்கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் ராஜசேகரனை தற்கொலைக்கு தூண்டிய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த வருவாய்த் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி திருச்சி கே.கே.நகர் உதவி ஆய்வாளர் உமாசங்கரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர். அதன் பிறகே, ராஜேசகரனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் வாங்கிச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sub inspector change waiting list for jwellery shop owner sucide in pattukottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->