ஆரம்பமாகிறது கோடை விடுமுறை - குஷியில் மாணவர்கள்..!
summar holiday start to 12 class student in tamilnadu
தமிழகம் மற்றும் புதுவையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்த தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என்று மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர். இதேபோன்று, கடந்த மார்ச் 5ஆம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அவர்களுக்கு வரும் 27ஆம் தேதியுடன் தேர்வு முடிகிறது.

இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பொதுத்தேர்வு முடிவதால், அவர்களுக்கு வரும் 28ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட, இப்போதே மாணவர்கள் வெளியூர் பயணத் திட்டமிடுகின்றனர்.
English Summary
summar holiday start to 12 class student in tamilnadu