வெயிலுக்கு "ரெட் கார்ட்".. ஜில்லுனு மாறும் சென்னை.. அப்போ CSK மேட்ச்? வெதர்மேன் அப்டேட் - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் புறநகரில் லேசான மழை பெய்து வரும் நிலையில் தென் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் அவ்வப்போது வரும் லேசான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

மக்களின் இந்த நிம்மதியை நீடிக்கும் வகையிலான செய்தியை தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "பெங்களூருவின் சில இடங்களில் இரவு மழை பெய்யும், சென்னைக்கு 15ஆம் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கும். இதன் காரணமாக வரும் 18ஆம் தேதி நடைபெறும் சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட் சென்னை மக்களுக்கு ஒரு புறம் நிம்மதி கொடுத்தாலும் பெங்களூருவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதும் போட்டி முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக தகுதி சுற்றுக்கு முன்னேறும். 

இல்லையெனில் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து சென்னை அணியின் தகுதிச்சுற்று நுழைவு அமையும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer rain will be start day after tomorrow in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->