திடீர் விசிட்! அதிமுக போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு! எடப்பாடிக்கு வலுசேர்க்கும் பிரேமலதா!
Support the AIADMK struggle of dmdk Premalatha vijayakanth
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க கோரியும், நடப்பு சட்டச்சபை கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவினர் தொடங்கி உள்ள உண்ணாவிரப் போராட்டத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா? இது குறித்து சட்டச்சபையில் விவாதிக்க வேண்டாமா? இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
English Summary
Support the AIADMK struggle of dmdk Premalatha vijayakanth