அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
supreme court investigation minister senthil balaji money fraud case
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியில் வந்த அடுத்த சில நாட்களிலேயே அவருக்குமீண்டும் மின்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை குறித்த நிலையை அறிக்கையை சீலிட்ட உறையில் அளிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றம் தாக்க செய்தது. அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை மே 2-ந்தேதிக்குள் சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இந்த வழக்கு குறித்த விசாரணையை மே 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
supreme court investigation minister senthil balaji money fraud case