இடைக்கால தடை! தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த இந்த ரிட் மனு தொடர்பாக, தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விவரம் மற்றும் தமிழக அரசின் உத்தரவு பின்னணி:

தமிழகத்தில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போன்ற இந்த ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், எனவே, இந்தவகை ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. 

மேலும், கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க போக்குவரத்துத் துறை தடை விதிக்கவே, இந்த விவகாரம் பூதாகாரமாகியது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில் தான் இன்று இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court order Tamil Nadu government Omni bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->