4 வேதங்களை கொண்ட கதை! நடிகர் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தின் செம்ம அப்டேட்! - Seithipunal
Seithipunal


தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு ஃபேன்டஸி படத்தில் நடிக்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான ‘கார்த்திகேயா 2’ படத்தை இயக்கியவர் சந்தூ மொண்டெட்டி. இவரின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் ‘கங்குவா’ படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பல திரைபிரபலங்கள் நடித்து உள்ளனர்.

பழங்காலத்தில் நடக்கும் கதையா மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. 

இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. 

கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு இயக்குநர் சந்தூ மொண்டெட்டியின் இயக்கத்தில், ரிக், யஜுர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இதனை இயக்குநர் சந்தூ மொண்டெட்டி உறுதி செய்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya new movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->