ரூ.4 கோடி விவகாரம்: பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் விதித்த நிலையில், இந்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பு வாதம் வைத்தது.

மேலும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? என்றும், 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போய் உள்ளது என்றும் சிபிசிஐடி தரப்பு வாதம் வைத்தது.

குறிப்பாக நீதிமன்ற அனுமதி இன்றி கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி தரப்பு  வாதம் வைத்தது. .

இதனையடுத்து, பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tambaram Money CBCID case BJP Kesava Vinayagam SC order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->