தமிழ் நடிகை காரில் கட்டத்தில் பாலியல் வன்கொடுமை! விரைவில தீர்ப்பு!
Tamil Actress harassment case
2017ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு பிரபல நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு, கும்பல் ஒன்றால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அந்த நடிகையை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக பல்சர் சுனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, சுனி நடிகர் திலீப்பின் தூண்டுதலால் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்ததாகவும், அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து திலீப்பும் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2020ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுவரை 261 பேர் சாட்சியாக கேட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகைக்கு மலையாள திரையுலகத்தினர் பலரும் முழு ஆதரவாக இருந்தனர்.
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கின் இறுதி விசாரணையை மே 21ம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளது. அதில் இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர். விசாரணை நிறைவடைந்த பிறகு தீர்ப்பு பிறக்கும் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
English Summary
Tamil Actress harassment case