இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழி.. திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக நாடு முழுவதும் இந்தி தேசிய மொழியா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நாள்முழுவதும் இந்தி குறித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நாடு முழுவதும் இந்தி மொழி எதிர்ப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி மற்ற மொழிகளைப் போல இந்தியாவின் ஒரு மொழி தான் என கூறினார். அஜய் தேவ்கனின் இந்த கருத்துக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி நிலையில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட இயக்குனரான பா ரஞ்சித் "இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் ஆதிக்க மொழியாக இருக்கிறது. தென் இந்தியர்களை விட வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இந்தியாவில் தமிழ் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil is the connecting language in India Film director Ranjith


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->