மக்களே உஷார்... தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ''மஞ்சள் எச்சரிக்கை''.!
Tamil Nadu 11 districts yellow alert
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கோவை ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 1ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் இரண்டாம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மழை பகுதியிலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ''மஞ்சள் எச்சரிக்கை'' விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் குமரி கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu 11 districts yellow alert