தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுகள் : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் தேர்வு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற  நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் கல்வியில் சேவையாற்றும் அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதிப்பிரிவு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.  

அதன்படி இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து 10 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தின் தொடக்கக் கல்வித்துறையில் 4 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 10 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷாபுரம் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.விஜயலெட்சுமி, கள்ளிக்குடி ஒன்றியம் கூடக்கோவில் நாச்சியப்ப நாடார் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செந்தில்வேல், மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.தென்னவன் உள்ளிட்ட தொடக்க கல்வி இயக்ககத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.சாந்தி, உசிலம்பட்டி ஒன்றியம் க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் க.ராஜேந்திரன், வடக்கு ஒன்றியம் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.பிரிட்டோ இனிகோ உள்ளிட்ட  பள்ளிக்கல்வித் துறை சேர்ந்த ஆசிரியர்கள் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Government Good Writer Awards 10 people from Madurai district selected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->