அரசு ஓட்டுநர்களுக்கு புதிய உத்தரவு - தமிழக அரசு அதிரடி - Seithipunal
Seithipunal


அரசு ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் தமிழக அரசு வாகனங்களை இயக்கும் 50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண், காது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண், காது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இதற்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டுநர்களை பரிசோதித்து தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண், காது மருத்துவ பரிசோதனையில் தகுதியற்றவர்களாக கண்டறியப்படுபவர்கள் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளில் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government orders medical examination for government drivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->