வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு!
Tamil nadu is the leading state in the field of agriculture tamil nadu government
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2021-ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 624 கோடி ரூபாய் 4 லட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழி வகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
முதன் முறையாக ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் பொது மக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்பூங்கா தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil nadu is the leading state in the field of agriculture tamil nadu government