இன்று தொடங்கியது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். 

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உயிரிழந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

மேலும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். 

மானிய கோரிக்கை மீதான விவாதம் நாளை முதல் தொடங்க உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் சட்டசபை கூட்டம் காலை, மாலை என இருவேளை நடைபெற உள்ளது. 

வருகின்ற 29ஆம் தேதி காலை காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேச உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Legislative Assembly session started today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->