பா.ஜ.கவிடம் 3 தொகுதிகளை கேட்கும் த.மா.கா கட்சி.!
Tamil State Congress Party asks BJP 3 constituencies
பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்த பேச்சு வார்த்தை ஜி.கே. வாசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேர் தலைமையில் நடையிற்று வருகிறது.
ஈரோடு, திருப்பூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 6 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை ஒதுக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து த.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதி கட்சிகளுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
English Summary
Tamil State Congress Party asks BJP 3 constituencies