கண் விழியில் நம் தேசியக்கொடியை ஏந்திய தமிழன்.!
Tamilian carrying our national flag in the eye
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நகை தொழிலாளி முட்டையின் ஓட்டை ஒட்டிய மெல்லிய படலத்தில் தேசிய கொடி வரைந்து அதனை தனது கண் விழியில் வைத்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
"நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவேன். இளைஞர்கள் நமது தேசத்தை கண் இமைகளைப் போன்று பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி வரையும் முயற்சியில் இறங்கினேன்.
இதனை தொடர்ந்து முட்டையின் வெள்ளை கருவிற்கும், முட்டை ஓட்டிற்கும் இடையே உள்ள மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இதனால் கண் விழிக்கு பாதிப்பு ஏற்படாது.
இதனை அடுத்து, 300 மில்லி கிராம் தங்கத்தை பயன்படுத்தி ஒரு வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் தேசிய கொடியை தாங்கி நிற்பது போன்று வடிவமைத்துள்ளேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நம் தேசத்தையும், நம் தேசத்திற்காக பாடுபட்ட வீரர்களையும் போற்ற வேண்டும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilian carrying our national flag in the eye