புடவை, நகை வாங்கி தருவது போல இதையும் செய்யுங்கள்! கணவர்களுக்கு அட்வைஸ் பண்ண தமிழிசை! - Seithipunal
Seithipunal


சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் தொண்டு நிறுவனம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். 

அப்பொழுது விழா நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் "புற்றுநோய் சம்பந்தமாக ஒரு சின்ன அறிகுறி இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பெண்கள் வெக்கப்பட்டு தள்ளி போடாதீர்கள். ஆண்கள் தனது மனைவிக்கு புடவை நகை வாங்குவது போல முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ள உதவுங்கள். பணம் இல்லை என்பதற்காக யாரும் சிகிச்சையை உதாசீனப்படுத்த கூடாது. மார்பக புற்றுநோய் மிகவும் முதிர்ந்த நிலை எட்டிய பின்னர் உயிரிழந்தவர்கள் இங்கு ஏராளம்.

பெண்களின் சேவை அனைத்து குடும்பத்திற்கும் மிகவும் முக்கியம். வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனையை அனைத்து பெண்களும் செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் தான் நேசிக்கும் பெண்ணுக்கு ஒரு பரிசாக மார்பக புற்றுநோய் குறித்து அறியவும், பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ள சொல்லவும்" என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் "தமிழகத்தில் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ள நிகழ்ச்சியாகவே இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். உலகில் 4 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் பரிசோதனைக்கு வருகிறார், 15 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார் ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டுபிடிக்க பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai advised to husbands for wife breast cancer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->