ஆரோக்கியமான போட்டிகள்... விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பின்னர் இன்று காலை விமான மூலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியிருப்பதாவது, நான் டெல்லி சென்றது அவசர பயணமாக இல்லை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பயணம் தான். என்னுடைய இந்த பயணத்திற்கும் பஞ்சாப் மாநில ஆளுநரின் திடீர் ராஜினாமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. 

மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்ததும் திடீர் சந்திப்பு அல்ல ஏற்கனவே திட்டமிட்டது தான். அவரிடம் புதுச்சேரி மாநில சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், புதுச்சேரியில் விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனை நடத்தினேன். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை முழு மனதுடன் நான் வரவேற்று அவரை வாழ்த்துகிறேன். நமது நாடு நமது ஜனநாயகம். இங்கு இவர்தான் அரசியலுக்கு வரவேண்டும். அவர் வரக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. நடிகர் விஜய் போல் பலரும் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அரசியலில் ஆரோக்கியமான போட்டிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai Soundararajan says Vijay political


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->