இதனை 'இரும்பு கரம்' கொண்டு தான் ஒடுக்க வேண்டும்... - தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal



வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 

வந்தே பாரத ராயல் தற்போது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சமடைகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி இணை தெரிவித்து கொள்கிறேன். 

பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் பிரித்து ஆளுகின்றனர். பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். மேலும் விரைவில் சென்னையிலிருந்து மைசூருக்கு புல்லட் ரயில் சேவை வரவுள்ளது. 

எதிர்கட்சியினர் சுயநலத்திற்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மக்களின் நலனுக்காக வாக்குகளை கேட்கிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீர் காகவும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார். 

காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்துள்ளார்கள். இதுதான் திமுகவின் சாதனை. கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. 

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதை மற்றும் வன்முறை கலாச்சாரத்தை இரும்பு கரங்கள் கொண்டு ஒழிக்க வேண்டும். 

தமிழகத்தில் அரசு பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai Soundararajan speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->