13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு… தமிழிசை பேட்டி.! - Seithipunal
Seithipunal


தென் சென்னை தேர்தல் அலுவலரிடம் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு அளித்துள்ளார். அதில், சென்னை தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்டுகளை தாக்கி விட்டு கள்ள ஓட்டு போட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் 13 ஆவது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், 

பூத் ஏஜெண்டுகளை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் குளறுபடி தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். 

வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்தால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கலாம். 

தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்த ஒரு பயனும் கிடையாது. வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை கலைத்தாலே 100% வாக்கு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai Sundararajan speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->