Artificial Intelligence: கூகுள் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!  - Seithipunal
Seithipunal


புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், நேற்று பல்வேறு தொழில் முதலீடு ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக செய்தி வெளியாகின. 

Yield Engineering Systems நிறுவனத்துடன் 150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. Microchip நிறுவனத்துடன் 250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஓமியம் நிறுவனத்துடன் 400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், GeakMinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், நோக்கியா நிறுவனத்துடன் 450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், Google நிறுவனத்துடன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் வி. அருண் ராய், கூகுள் நிறுவன உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM stalin US Trip Google Artificial Intelligence


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->