கேரள குண்டு வெடிப்பு || தமிழக எல்லைகளை கண்காணிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
TamilNadu DGP orders to monitor Tamilnadu Kerala borders
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரியில் இன்று காலை 9:30 மணி அளவில் கிறிஸ்தவர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது. இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் கேரளா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையினருடன் தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ள அவர் சந்தேகக்கும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்
English Summary
TamilNadu DGP orders to monitor Tamilnadu Kerala borders