பழனியில் தமிழில் அர்ச்சனை..! பக்தர்கள் வரவேற்பு...! - Seithipunal
Seithipunal


அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தின் கீழ் பழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்னை செய்யும் முறை இன்றிலிருந்து தொடங்கியது.

இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் படி தமிழகத்தில் உள்ள பெரும்பாலன கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யபட்டு வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இன்றிலிருந்து தமிழில் அர்ச்சனை முறை நடைமுறைப்படுத்தபட்டது. கடந்த சில நாட்களாக இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது. விடுமுறை தினங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கம் போல இன்று அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்கதர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்ததால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எல்லா கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயரும் செல்போன் எண்களும் விளம்பர பலகையில் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Dindigul Palani Temple Tamil Language Archana Started


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->