"மண்பாண்டத் தொழிலாளர்கள் களிமண் போன்றவற்றை இலவசமாக எடுக்கலாம்" - ஸ்டாலின் அறிவிப்பு !!
tamilnadu government allows to take soil easily
பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் உள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் மூலம் பராமரிக்கப்படும் நீர் ஆதாரங்களில் இருந்து இலவசமாக எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார்.
வேளாண் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தை ஊட்டச்சத்துக்களால் செழுமைப்படுத்த இந்த மண்ணைப் பயன்படுத்தலாம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பாண்டங்கள் மற்றும் பிற பாத்திரங்கள் செய்ய இந்த களிமண்ணையம், வண்டல் மண்ணையும் பயன்படுத்தலாம், மேலும் இந்த மண் எடுப்பதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
![](https://img.seithipunal.com/media/stalin-twbkh.jpg)
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 2 ஆண்டுகளாக நீர்நிலைகள் போதுமான அளவு நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க முடியவில்லை. “இந்த ஆண்டு, நீர்நிலைகளில் சேமிப்பு அளவு குறைவாக இருப்பதால், அவைகளை தூர்வாரினால், அடுத்து வரும் பருவமழை காலத்தில், அந்த நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.
தற்போதைய நடைமுறையில் உள்ள விதிகள் படி, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களில் அல்லது அருகிலுள்ள நீர் ஆதாரங்களில் இந்த மண்ணை எடுக்கலாம். இதற்காக, கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்ற பின்னரே இந்த மண்ணை எடுக்க முடியும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்” என்று ஸ்டாலின் கூறினார்.
ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தித்ததின் படி, "சிறு கனிமச் சலுகை விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கிராமங்களில் உள்ள அந்தந்த விஏஓக்கள் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களை ஆன்லைன் மூலம் அனுமதிக்கலாம் என்றும் முதல்வர் கூறினார்.
English Summary
tamilnadu government allows to take soil easily