மாநிலத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் - தமிழக அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள டெல்லி, மத்தியபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் வைத்துள்ளன. இது பல்வேறு தருணங்களில் அரசுக்கு பயனுள்ளதாக உள்ளன.

அதாவது, இந்த ஹெலிகாப்டர்கள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும், அவற்றில் சிக்குபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கும், மருத்துவ உதவி வழங்குவதற்கும், இடரில் சிக்கிய நோயாளிகளை வேகமாக மீட்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், வெள்ள பாதிப்பின்போது சேத விவரங்களை கணக்கிடுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்தவாறு முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்வது வாடிக்கையாக உள்ளது. ஹெலிகாப்டர் சொந்தமாக இல்லாத மாநிலங்கள் மத்திய அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரையோ அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு வாங்கியோ பயன்படுத்தி வருகின்றன. 

இதனால் அனுமதி பெறுவதில் கால தாமதம், தேவை இல்லாத பண செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசிடம் ஹெலிகாப்டர், தனி விமானம் உள்ளிட்டவை சொந்தமாக இல்லை என்பது சென்னையை சேர்ந்த தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்து பெற்ற தகவலில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசுக்கு சொந்தமாக விமானம், ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் இல்லை என்று பொதுத்துறை தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu government explain own helicopter and flight buy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->