மேகதாது அணை விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு .!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மேகதாது அருகே அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. 

மேலும், காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிற நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில் தெரிவித்திருப்பதாவது:- 

"மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரம் குறித்து, நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை செய்ய முடியாது. அதேபோல், புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பதும் ஆணையத்தின் பணி கிடையாது. 

காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுப்பதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government reply petiition in supreme court for megathathu dam case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->