நேரத்தைக் கடைபிடிக்காவிட்டால் இனி இது தான் நடக்கும்.. அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை.!
tamilnadu government warning setc bus drivers keep timing
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என்று சுமார் 1,200 பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்துகளின் நேர விரயம் காரணமாக அரசு பேருந்துகளில் பயணிப்பதைவிட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கு அரசு விரைவு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அந்த பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பேருந்தை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது:-
அரசு விரைவு பேருந்துகளை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் விதமாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ஓட்டுனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு ஒன்றும் அனுப்பப்படும். இந்த லிங்க் மூலம் பேருந்தின் காலதாமதம், சுத்தமின்மை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் நடைமுறைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பேருந்தை இயக்காத ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilnadu government warning setc bus drivers keep timing