தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்‌.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். மேலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்தி திணிப்பு விவகாரம் குறித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரின் பேச்சுக்கு விழா மேடையிலேயே ஆளுநர் ரவி பதில் அளித்து பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு டெல்லி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 17-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் பங்கேற்க உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu governor RN Ravi travelling to Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->