சுற்றுலா சென்றபோது சோகம் - கடலில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவிகள் பலி.!
tamilnadu medical students drowned sea in karnataga
திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்த மருத்துவ மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி, கோகர்ணா, முருடேஸ்வருக்கு சுற்றுலா சென்றனர்.
அதன் படி அவர்கள் நேற்று முன்தினம் கோகர்ணாவில் உள்ள குட்லே கடற்கரை அருகே ஜடாயுதீர்த்த கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் இரண்டு மாணவிகள் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதி௫ர்ச்சியடைந்த சக மாணவிகள் காத்திக் கூச்சலிட்டதில், அந்த பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவர், கடலில் குதித்து 2 மாணவிகளையும் காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவரும் ராட்சத அலையில் சிக்கி கொண்டு தத்தளித்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீர்சாகச குழுவினர் விரைந்து வந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில், இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
உயிருக்கு போராடிய மணிராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதையடுத்து மாணவிகள் 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tamilnadu medical students drowned sea in karnataga