தமிழகம் முழுவதும் மணல் குவாரியை திறக்க வேண்டும்! ஆக.8-ல் போராட்டம் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 17 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஆன்லைன் மூலமாக மணல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், தற்போது மணல் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர் என முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

ஏற்கனவே, இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது, அந்த தீர்ப்பின்படி ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்ய கூடாது என்றும், தமிழக அரசின் பொதுப்பணி துறையே நேரடியாக மணலை எடுத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு, நிறுத்தப்பட்டுள்ள மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். எண்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்லும் வகையில், வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை எழும்பூர் பகுதியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் லாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Sand Quarry issue Aug Protest announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->