தமிழகம்: வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வு நடத்துறீங்களா? கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - எச்சரிக்கை!
Tamilnadu Teacher Education B Ed
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்./எம்.எட் பட்ட வகுப்புகளில் வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக, மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC - யில் இருந்து புகார் மனு இப்பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நேரில் சென்று கேரளா காவல்துறையில் Global Academy மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி முதல்வர்கள் / செயலாளர்கள் இது போன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கலாகிறது.
மேலும், இது போன்ற தவறான irregular மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பில் முன் அறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, ஆட்சிமன்ற குழுவின் அனுமதி பெற்று, கல்லூரிகளின் இணைவு ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கலாகிறது.
மேலும் சில கல்வித்துறை செய்தி துளிகள்:
* தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடியை ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, சூரிய ஆற்றலின் உதவியுடன் மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
English Summary
Tamilnadu Teacher Education B Ed