நாளை அறிமுகமாகும் தவெக கொடி... கலந்து கொள்ள போவது யார் யார்?! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

இதற்காக சென்னை பனையூரில் நடைபெறும் விழாவிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்ம், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். 

மேலும் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கான ஆயத்தப் பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை, கடந்த 19ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்த காணொளி வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக நாளை காலை 11 மணி அளவில், பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்து, ஏற்றி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு அஸ்ழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu TVK Vijay party flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->