தென் தமிழகத்தில் மழை, மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்!
Tamilnadu weather report IMD Rain Alert
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்று வீசுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்: இந்த பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நாட்கள்: அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamilnadu weather report IMD Rain Alert