2 நாள், 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! நாள் குறித்த வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும்இ மேலும், காலையில் லேசான பனிமூட்டமும் நீலகிரி மாவட்டத்தில் இரவில் உறைபனி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.  

மழை முன்னறிவிப்பு:
- ஜனவரி 8: தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை.  
- ஜனவரி 9: கடலோர தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை.  
- ஜனவரி 10-11: கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.  

சென்னையின் வானிலை:
- இன்று: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 30-31°C, குறைந்தபட்சம் 22-23°C.  
- நாளை: வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; வெப்பநிலைகளில் மாற்றமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu weather report rain alert 5 jan 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->