இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி: வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்! ஓட்டுனருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கடலூர், பட்டான் குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சுற்றுலாவுக்காக காரைக்கால் சென்று பின்னர் இன்று காலை வீடு திரும்பினர்.

தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். விபத்து நடந்த உடன் லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதனை அடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tarangambadi truck collision accident youths killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->