போராட்டத்தை அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்., வழக்கம்போல டாஸ்மாக் கடை இயங்குமா?!
tasmac staffs committee protest anounce
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் சம்பந்தமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக சட்டபேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் இருக்க கூடிய 6215 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், 15,000 விற்பனையாளர்கள் மற்றும் 3000 விற்பனையாளர்கள் உள்ளிட்ட 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு, இந்த ஏப்ரல் மாதம் 2022 ஆண்டு முதல் ஊதியத்தில் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று, அறிவிப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 500 ருபாய் சம்பள உயர்வு போதுமானதல்ல என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பள உயர்வு கேட்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
English Summary
tasmac staffs committee protest anounce