மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய ஆசிரியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே மேட்டுப்பலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். 26 வயதுடைய இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்தி உள்ளார்.

இதற்கிடையே பள்ளி சென்ற மகளை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர்கள் போலீஸ் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி மீட்டனர்.

அதன் பின்னர் போலீசார் மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர் முபாரக்கை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தர்மபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சையத் பருகத்துல்லா ஆசிரியர் முபாரக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அந்த உத்தரவின் படி போலீசார் ஆசிரியர் முபாரக்கை சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து குடும்பம் நடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested foe kidnape school student and sexuall harassment case in krishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->