மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் - செங்கல்பட்டில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகே தனியார் பள்ளி ஒன்றில் உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் ரெக்கார்டு நோட்டு எழுதி வராததால், அந்த மாணவியை பிரம்பால் அடித்து, இரட்டை அர்த்தத்திலும் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வந்து புகார் அளித்தனர். அதன்பேரில், பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஜெயராஜை பணிநீக்கம் செய்தது. 

ஆனால், அந்த பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த போதும், அந்த மாணவர்கள் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் குரூப்பை உருவாக்கி அதில் சம்பந்தப்பட்ட மாணவி குறித்து அவதூறு பதிவிட்டு வந்தனர். 

இதையறிந்த மாணவியின் பெற்றோர் புகார் அளிப்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு நேற்று உறவினர்களுடன் சென்றனர். அப்போது, அங்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதில் கிறிஸ்டோபர் என்ற ஆசிரியரை மாணவியின் உறவினர்களைத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். அதன்பேரில்அதன் படி தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜெயராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for speech double meaning to student in chengalpat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->