கோவை || பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய ஆசிரியை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் பகுதியில் உள்ள கோவில்பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். 

இவர் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நெருங்கி பழகி வந்த நிலையில் ஆசிரியை சவுந்தர்யா அந்த மாணவியை வெளியே அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பதறிப்போன மாணவியின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் படி போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher harassment to 9th class student in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->