அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்த ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் கீழநாலுமூலைகிணற்றில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய முன் தினம் மதியம் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நெய் சோற்றுடன் கறிவிருந்து வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் சந்தோஷமாக கறி விருந்து சாப்பிட்டுவிட்டு ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கறி விருந்து வைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teachers giving curry feast to government school students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->