தலைக்கேறிய போதை! வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய குடிமகன்!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் தினேஷ் (வயது 27) இவர் ஜோதிடர். இவரது மைத்துனர் மாரிமுத்து. 

இவர்கள் இருவரும் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த முத்துமணி (வயது 25) அலெக்ஸ் குமார் (வயது 22) ஆகிய 2 பேரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர். 

அப்போது முத்துமணி ஆத்திரமடைந்து கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மாரிமுத்து தலையில் அடித்துள்ளார். இதில் மாரிமுத்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று சேரவே மாரிமுத்து மற்றும் அலெக்ஸ்குமார் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். 

இதனை தொடர்ந்து மாரிமுத்துவை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமணி மற்றும் அலெக்ஸ்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager attacked beer bottle 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->