சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, மாரண்டஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி (வயது 14) 8 ஆம் வகுப்பு படித்து விட்டு மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். 

மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரை சிறுமி காதலித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறி வாலிபருடன் அருகில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகி அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு போன்ற உபாதைகளால் சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக உள்ளதை மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பெயரில் மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager made girl pregnant arrested POCSO Act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->